இலங்கை பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு- தொழில்துறை அமைச்சர் ராஜினாமா

இலங்கை பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் மனுஷா நாணயக்கார தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இலங்கை பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சே நியமிக்கப்பட்டதால் அந்நாட்டு அரசியலில் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்றதற்கு ரணில் ஆதரவாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ராஜபக்சே பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தொழில்துறை மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சராக இருந்த மனுஷா நாணயக்கார தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுதொடர்பாக அதிபருக்கு அவர் அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில், ராஜபக்சே நியமிக்கப்பட்டது இலங்கை அரசியலமைப்புக்கு முரணானது என்றும், ஜனநாயகத்திற்கு விரோதமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிறிசேனா ஆதரவாளரான நாணயக்கார ராஜினாமா செய்துள்ளது ராஜபக்சேவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version