ராணுவ டீலராக நினைத்த நபர், தற்போது நாட்டின் பிரதமராக நினைப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அருண் ஜேட்லி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்கரான உல்ரிக் மிக்நைட், ராகுல் காந்தியின் தொழில் பங்குதாரர் என தெரிவித்தார். 2003 முதல் 2009 ஆம் ஆண்டு வரை இங்கிலாந்தில் செயல்பட்ட பேக்கோப்ஸ் நிறுவனத்தில், உல்ரிகுக்கு 35 சதவீதமும், ராகுல் காந்திக்கு 65 சதவீத பங்கும் இருந்ததாக சுட்டிக்காட்டிய அருண் ஜேட்லி, 2009 ஆம் ஆண்டில் அந்த நிறுவனத்தில் இருந்து ராகுல் காந்தி விலகிய பிறகு, பேக்கோப்ஸ் நிறுவனத்தின் செயல்பாடு நிறுத்தப்பட்டுவிட்டதாக கூறினார்.
இதனிடையே 2002 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி பேக்கோப்ஸ் பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்தில் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் இயக்குநர்களாக இருந்ததாகவும், இதனையடுத்து 2003 ஆம் ஆண்டு அதே பெயரில் இங்கிலாந்திலும் ஒரு நிறுவனமும் துவங்கப்பட்டதாக தெரிவித்தார்.