இந்தியாவில் போயிங் 737 ரக விமானங்களை நிறுத்த வைக்க முடிவு

எத்தியோபியா விமான விபத்து எதிரொலியாக போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை இன்று மாலை 4 மணிக்குள் தரையிறக்க இந்திய விமான போக்குவரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

எத்தியோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபாவில் இருந்து கென்யா தலைநகர் நைரோபி நோக்கிச் சென்ற எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமானம் கடந்த சில நாட்களுக்கு முன் விழுந்து நொறுங்கியது. இதில் பயணித்த 8 இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்களை தரையிறக்கி நிறுத்தி வைக்க சீன அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், பிரிட்டன் நாடுகளும் 737 ரக விமானத்தை இயக்க தடை விதித்துள்ளன.

இந்நிலையில் இந்தியாவிலும் போயிங் 737-ஐ இயக்க தடை விதிக்க டி.ஜி,சி.ஏ எனப்படும் உள்நாட்டு விமான போக்குவரத்து இயக்கம் முடிவு செய்துள்ளது. இன்று மாலை 4 மணிக்குள் போயிங் 737 விமானங்களை தரையிறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Exit mobile version