மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து சிறையில் உள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இந்த நிலையில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவிடம் விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதனையடுத்து சசிகலாவிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி பெங்களூரு பரப்பன அக்ரகார சிறை நிர்வாகத்துக்கு ஆணையம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.இதேபோன்று, தமிழக உள்துறைக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. சிறை நிர்வாகத்தின் முடிவினை பொறுத்து பரப்பன அக்ரகார சிறை அல்லது அறுமுகசாமி ஆணையத்தில் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.