சட்டப்பேரவையில், இன்று தொழில் துறை மானியக் கோரிக்கைகள் மீதும், சிறு, குறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 28 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை காலை 10 மணிக்கு கூடியதும், கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்படும். இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் முக்கிய பிரச்சனைகள் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதம் நடத்துவார்கள். தொழில் துறை மானியக் கோரிக்கைகள் மீதும், சிறு, குறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது. அமைச்சர் எம்.சி. சம்பத் மானியக் கோரிக்கை மீதான கேள்விகளுக்கு பதிலளித்து துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிடுகிறார்.