தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவுத்துறை மானிய கோரிக்கை மீது இன்று விவாதம்

தமிழக சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவுத்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற உள்ளது.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 28-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. முதல் நாளில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகள் மீது விவாதம் நடைபெற்றது. நேற்று பள்ளிக்கல்வித் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, உயர் கல்வித் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதையடுத்து இன்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மீது விவாதம் நடைபெறும்.

Exit mobile version