தர்பார் திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் துவங்கியது

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

‘பேட்ட’ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு ஏஆர்.முருகதாஸ் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் ஒப்பந்தமானார். ‘தர்பார்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வழக்கமான பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது.

போலீஸ் கமிஷனராக ரஜினிகாந்த் நடிக்கும் இந்த திரைப்படத்தின் கதை 1980களில் மும்பையில் நடப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் தர்பார் திரைப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

Exit mobile version