விழுப்புரம் நகரப்பகுதிகளில் வீடு வீடாக வாக்கு சேகரித்த அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விழுப்புரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும் சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம், தொகுதிக்குட்பட்ட தந்தை பெரியார் நகர், வழுதரெட்டி, விராட்டிகுப்பம், ஜி.ஆர்.பி தெரு, பாப்பான்குளம் உள்ளிட்ட 12 வார்டுகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிமுக அரசின் பத்தாண்டு கால சாதனைகளை விளக்கியும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாய், வாஷிங் மெஷின், ஆண்டுக்கு 6 சிலிண்டர், இலவச கேபிள் இணைப்பு உள்ளிட்ட அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை விளக்கியும் வாக்கு சேகரித்தார். பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், மாலைகள் சூட்டியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.