சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 6 பயணிகளிடம் இருந்து 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை உள்ளிட்ட பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
துபாய் மற்றும் இலங்கையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சென்னை மற்றும் கேரளாவை சேர்ந்த 4 பயணிகளிடம் இருந்து ஆயிரத்து 250 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் சென்னையிலிருந்து இலங்கைக்கு விமானம் மூலம் 27 லட்சம் வெளிநாட்டுப் பணத்தை கடத்த முயன்ற சென்னையை சேர்ந்த இப்ராஹிம் என்பவரையும் கைது செய்தனர். இதையடுத்து, சென்னையை சேர்ந்த ஜாபர் என்ற பயணியிடம் இருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 70 லட்சம் மதிப்பிலான தங்கம், வெளிநாட்டு பணம், சிகரெட்களை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், 6 பயணிகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.