‘கஜா’ புயலை எதிர்கொள்ள கடலூர் மாவட்டம் முழு அளவில் தயாராக உள்ளதாக, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
‘கஜா’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கடலூரில் நடைபெற்றது. தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ககன்தீப்சிங் பேடி, காவல் கண்காணிப்பாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கடலூரில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.சி.சம்பத், ‘கஜா’ புயலை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் நூறு சதவிகிதம் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.