60 நாட்களில் அறுவடைக்கு தயாராகும் சாம்பார் வெள்ளரி!

பெரியகுளம் அருகே சாம்பார் வெள்ளரிக்காய்களின் விளைச்சல் அதிகரித்து காணப்படுகிறது.

தேனி மாவட்டம், வைகை அணையின் பின்பகுதியில் உள்ள காமக்காபட்டி, ஜல்லிபட்டி, வீரஜக்கம்மாள்புரம், சர்க்கரைப்பட்டி, சாவடிப்பட்டி ஆகிய பகுதிகளில் சாம்பார் வெள்ளரி அதிகளவில் பயிரிடப்படுகிறது. இந்தாண்டு அப்பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளதால், அதன் விளைச்சல் அதிகரித்து காணப்படுகிறது. 60 நாட்களில் அறுவடைக்குத் தயாராகும் இவ்வகைப் பயிர்கள், தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் சாம்பார் வெள்ளரியானது, கிலோவுக்கு 10 ரூபாய்க்கு விற்பனை ஆகும் பட்சத்தில் லாபம் கிடைக்கும் என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version