ஐபிஎல் போட்டி: ராஜஸ்தான் அணியை போராடி வீழ்த்திய சென்னை அணி

ஐபிஎல் தொடரின் ராஜஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை அணி போராடி வெற்றி பெற்றது.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் டாஸில் வென்ற சென்னை அணி பந்துவீசத் தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான ரஹானே 14 ரன்களுக்கும், ஜோஷ் பட்லர் 23 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது.

152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் துவக்க வீரர்களான ஷேன் வாட்சன், டு பிளிஸ்சிஸ் சுரேஷ் ரெய்னா, கேதார் ஜாதவ் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து களமிறங்கிய தோனி, அம்பதி ராயுடு ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டது. அபாரமாக ஆடிய அம்பதி ராயுடு 57 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். நிதனாமாக ஆடிய கேப்டன் தோனி 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மிச்செல் சாண்ட்னர் சிக்சர் அடித்து ஆட்டத்தை நிறைவு செய்தார். இந்த வெற்றியை அடுத்து சென்னை அணி 12 புள்ளிகளுடன் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

Exit mobile version