சென்னையில் 2 லட்சம் கட்டடங்களுக்கு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள, அம்மா மாளிகையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் குறித்த செய்முறை கருத்தரங்கை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்து உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழைநீர் சேகரிப்பு திட்டத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளதாக தெரிவித்தார். குடிநீர் பிரச்னைக்கு அரசு முயற்சிகள் எடுத்து வந்தாலும், தனிமனித ஒத்துழைப்பும் அவசியம் என்று கூறிய அமைச்சர் வேலுமணி, மண்டல அலுவலர் தலைமையில் வார்டு வாரியாக ஒரு குழு வீதம், 200 குழுக்கள் அமைத்து, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஆய்வு செய்ய உள்ளதாக கூறினார்.