சென்னையில் செயற்கை யானை மூலம் தலைக்கவச விழிப்புணர்வு

சென்னையில் போக்குவரத்து காவல்துறை சார்பில், செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட யானையை வைத்து தலைக்கவசத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

மாநகர போக்குவரத்து காவல்துறையினர் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னை அண்ணாநகர் வளைவு பகுதியில் பைபர் மற்றும் ரப்பரால் ஆன செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட யானை ஒன்றை வைத்து, அதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தத்ரூபமான சத்தத்துடன் உருவாக்கப்பட்ட செயற்கை யானையின் மீது தலைக்கவசத்தை அணிய வைத்து, இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் பொது மக்களுக்கும் போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். செயற்கை யானை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட நிகழ்வு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

Exit mobile version