கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தேங்காய் ஓடுகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் சமையலறைப் பொருட்கள், டீ கப் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன.
குமரி மாவட்டத்தில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாக இருப்பதால் தேங்காய் ஓடுகள் அதிகளவில் கிடைக்கின்றன. இதனால் குறைந்த அளவு முதலீட்டிலேயே டீ கப், பிளேட், கைக்கடிகாரம் போன்ற பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் ஓடுகளில் தயாரிக்கப்படும் பாத்திரங்களில் வைக்கப்படும் உணவுப் பொருட்கள் அதிக நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும் எனத் இத்தொழிலில் ஈடுபட்டு வரும் கைவினைக் கலைஞர்கள் தெரிவிக்கின்றனர்.