கொரோனாவால், விநோத முறையில் நடைபெற்ற திருமணம்

கொரோனா வைரஸ் எதிரொலியால் வெளிநாட்டில் பணிபுரியும் தெலுங்கானா எம்பிஏ பட்டதாரி ஒருவர், பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக தனது திருமணத்தை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்தி முடித்துள்ளார்.

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தல் ஏற்படுத்தி உள்ளது கொரோனா வைரஸ். சீனாவில் இருந்து பரவிய இந்த கொரோனா வைரஸ், மனித குலத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் உள்ளது. கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் கொரோனாவிற்கு 3 பேர் பலியாகி இருப்பதால், முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தெலுங்கானாவைச் சேர்ந்த ஷேக் அப்துல் நபி என்பவர் தனது மகள் திருமணத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தி முடிக்க திட்டமிட்டிருந்தார். மணமகன், சவுதி அரேபியாவில் பணி புரிந்துவருவதால், கொரோனா வைரஸ் காரணமாக விமான நிலையங்களில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், திருமணத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் வரமுடியாமல் போனது. இதனையடுத்து, திருமணத்தை வித்தியாசமான முறையில் நடத்த இரண்டு தரப்பு குடும்பத்தினரும் ஒத்துழைப்பு வழங்கியதால், பின்னர் வீடியோ கால் வழியாக திருமணத்தை நடத்தி முடித்தனர்.

திருமண சடங்குகள் அனைத்தும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்தி முடிக்கப்பட்டது. மணமகன் முகமஹு அத்னான் கொரோனா தாக்குதல் கட்டுக்குள் வந்த பிறகு இந்தியாவுக்கு வந்து தனது திருமண வாழ்க்கையை தொடங்குவதார் என்று தெரிகிறது.

Exit mobile version