ரயில் விபத்தின் பின்னணி
ஹவுராவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், பாலசோர் அருகே பஹானாகா பஜார் ஸ்டேஷன் என்ற இடத்தில் சரக்கு ரயில் ஒன்றின் மீது மோதியதில் அதன் சில பெட்டிகள் தடம் புரண்டன. அந்த பெட்டிகளை ரயில்வே ஊழியர்கள் மீட்டு அருகே இருந்த தண்டவாளத்தில் நிறுத்திவைத்திருந்தனர். அந்த சமயத்தில், அந்த தண்டவாளத்தில் யஷ்வந்த்பூரில் இருந்து ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் வந்ததால்தான் இந்த கொடூரம் நேரிட்டது.
சென்னை நோக்கிச் சென்றுகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் சுமார் 10-12 பெட்டிகள் பாலசோர் அருகே தடம் புரண்டன. அப்போது தடம் புரண்ட அதன் ரயில் பெட்டிகள், அதற்கு அருகே மற்றொரு தண்டவாளத்தில் யஸ்வந்த்பூரில் இருந்து ஹௌராவுக்கு சென்றுகொண்டிருந்த ரயிலின் மீது மோதியது. இதன் காரணமாக அதிலும் சில பெட்டிகள் தடம் புரண்டு உள்ளது.
அதே கிழமை அதே ரயில் அதே விபத்து அதே இடம்
14 ஆண்டுகளுக்கு முன் 2009 பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி ஜாஜ்பூர் மாவட்டத்தில் கோரமண்டல் விரைவு ரயிலின் 13 பெட்டிகள் தடம் புரண்டது. இந்த மாவட்டம் தற்போதைய ரயில் விபத்தின் பகுதிக்கு அருகில் தான் உள்ளது. அதில் 16 பேர் மரணம் அடைந்தார்கள். 161 பேர் காயம் அடைந்தார்கள். இந்த நாளை ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கருப்பு வெள்ளி என்று அழைத்து வருகின்றனர்.
Discussion about this post