சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இடையே தீயின் பயன்பாடு இன்றி உணவு தயாரிக்கும் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில், கேரட் லட்டு, உலர் பழங்கள் உருண்டை, கடலை உருண்டை, இளநீர் பாயாசம், பனைவெல்லம் பாயாசம்,பீர்க்கங்காய் சாதம் என 60க்கும் மேற்பட்ட இயற்கை உணவுகளை தயாரித்து மாணவர்கள் காட்சிப்படுத்தியிருந்தனர். இப்போட்டியில் ஒரு குழுவில் இரண்டு பேர் வீதம் 120 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தேவகோட்டை மாவட்ட கல்வி அதிகாரி சத்தியமூர்த்தி பரிசுகளை வழங்கினார்.