ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக போட்டியிட உள்ள நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார், செங்கோட்டையன், செல்லூர் ராஜு, வளர்மதி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.சி.கருப்பண்ணன், கே.பி.அன்பழகன், சி.விஜயபாஸ்கர், ராஜேந்திரபாலாஜி, கே.சி.வீரமணி, எம்.சி.சம்பத், காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், பெஞ்சமின், இசக்கி சுப்பையா, ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பொறுப்பாளர்கள் நியமிப்பது தொடர்பாகவும், தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வழங்கினார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக கழக இடைக்கால பொதுச்செயலாளர் தலைமையில் ஆலோசனை!
-
By Web Team
- Categories: அஇஅதிமுக
- Tags: ADMK MeetingconferenceEPSerode by election 2023salem
Related Content
கொத்தடிமைகளின் கூடாரம் திமுக Vs ஆளுமையின் அடையாளம் அதிமுக!
By
Web team
September 27, 2023
கரும்பு விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க பொதுச்செயலாளர் அறிக்கை!
By
Web team
September 9, 2023
அதிமுகவில் இருந்து இருவர் நீக்கம்! - பொதுச்செயலாளர் அதிரடி!
By
Web team
September 4, 2023
காவல் துறையை கையில் வைத்துக்கொண்டு மக்களைக் காப்பற்ற துப்பு இல்லை - எதிர்க்கட்சித் தலைவர் கடும் கண்டனம்!
By
Web team
September 4, 2023
திமுகவை எதிர்த்து அதிமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! - பொதுச்செயலாளர் அறிக்கை!
By
Web team
September 2, 2023