ம.பி. உள்ளிட்ட 3 மாநிலங்களில் காங். ஆட்சியை கைப்பற்றும் என கருத்துக் கணிப்பில் தகவல்

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

வரும் 12-ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 7-ம் தேதி வரையில் பல்வேறு கட்டங்களாக ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தல் தொடர்பாக ஏ.பி.சி- சி.வோட்டர்ஸ் நிறுவனங்கள் இணைந்து கருத்துக் கணிப்புகளை நடத்தின.

இதில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என தெரிய வந்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் காங்கிரசுக்கு 42.6 சதவீத வாக்குகளும் பா.ஜ.க.வுக்கு 40.9 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

முதலமைச்சர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியாவிற்கு 42.5 சதவீதம் பேரும் தற்போதைய முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு 37 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தானில் காங்கிரசுக்கு 44.8 சதவீத வாக்குகள் கிடைக்கும். அதே நேரம் பா.ஜ.க.விற்கு 33.2 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் சச்சின் பைலட்டுக்கு 38.8 சதவீத ஆதரவும், முதலமைச்சராக இருக்குதம் வசுந்தரா ராஜேவுக்கு 21.6 சதவீத ஆதரவும் கிடைத்துள்ளன.

சத்தீஸ்கரில் காங்கிரசுக்கு 36.9 சதவீத ஆதரவும் 34.7 சதவீத ஆதரவும் கிடைத்துள்ளன.

Exit mobile version