விருதுநகரில் பிரபல புலனாய்வு இதழின் புகைப்படக்காரர் மீது காங்கிரஸ் கட்சியினர் கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகரில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது இந்நிகழ்வில் காலியாக இருந்த ஏராளமான நாற்காலிகளை புகைப்படம் எடுக்க முயன்ற, பிரபல புலனாய்வு இதழைச் சேர்ந்த புகைப்படக்காரர் ஆர்.எம். முத்துராஜ் மீது காங்கிரஸ் கட்சியினர் சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.
இதில் பத்திரிகை புகைப்படக்காரர் ஆர்.எம்.முத்துராஜுக்கு முகம், மார்பு மற்றும் கழுத்துப்பகுதியில் கடுமையான காயங்கள் ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, திமுக கூட்டணிக்கட்சியினர் மேடையில் இருக்கும்போதே, பத்திரிகையாளர் ஒருவர் காங்கிரஸ் கட்சியினரால் தாக்கப்பட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பின்னர்,காங்கிரஸ் கட்சியினர் மீது காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. எதிர்க்கட்சியாக இருக்கும்போதே, இவ்வாறு அராஜகத்தில் ஈடுபடும் திமுக காங்கிரஸ் கூட்டணியினர், ஆட்சிக்கெல்லாம் வந்தால் என்னனென்ன கொடுமைகள் நடக்குமோ என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனர்.