கர்நாடகாவில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 14 பேரையும் கட்சியில் இருந்து நீக்கி காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.
காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் திடீரென ராஜினாமா செய்தனர். இதனால் கர்நாடக அரசியலில் குழப்பம் நிலவிய நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியடைந்தது. இதையடுத்து, 14 எம்.எல்.ஏ.க்களையும் சபாநாயகராக இருந்த ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்தார்.
இந்த நிலையில், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட 14 பேரையும் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.