ஆந்திராவில் காங்கிரஸ் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியீடு

ஆந்திராவில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆந்திராவில் மொத்தமாக 25 மக்களவை தொகுதிகளும், 175 சட்டப்பேரவை தொகுதிகளும் உள்ளன. இதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம், விஜயவாடா மற்றும் நந்தியாள் ஆகிய மூன்று மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 45 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளன.

Exit mobile version