ரக் ஷா பந்தன் விழாவிற்கு மார்வாடி சமூகத்தினர் முதலமைச்சருக்கு வாழ்த்து

சகோதரவத்துவத்தை உணர்த்தும் வகையில் ரக் ஷா பந்தன் விழா நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்த மார்வாடி சமூகத்தினர் ரக் ஷா பந்தன் விழா வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

முதலமைச்சருக்கு மரியாதை செலுத்திய பல்வேறு தரப்பினர், மலர் கொத்து கொடுத்தும், ராக்கி கட்டியும், மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனை தொடர்ந்து இனிப்புகள் வழங்கிய முதலமைச்சர் ரக்ஷா பந்தன் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார். இதில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version