அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் கூட்டமானது, சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது. காலை 11:30 மணியளவில் நடைபெற்ற கூட்டத்தில், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக ஒரு ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திட்டமிட்டு உள்நோக்கத்துடன் பேசியுள்ளார் என்று கண்டனத் தீர்மானத்தினை எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் வாசித்துக் காட்டினார். கண்டனத் தீர்மானம் பின்வருமாறு உள்ளது.
Discussion about this post