குடிசையில் வாழும் அனைவருக்கும் 2023க்குள் கான்கிரீட் வீடுகள்…

தேர்தலுக்குப் பிறகு அனைத்து ஏழை தொழிலாளிகளுக்கும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதியளித்தார். மதுரை மாவட்டம் பெரிய ஆலங்குளம் பகுதியில் திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தாலிக்கு தங்கம், பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் போன்ற தொலை நோக்கு திட்டங்களை அதிமுக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதாக கூறினார்.

வடபழஞ்சியில் பிரசாரம் மேற்கொண்ட துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுக அரசின் நலத் திட்டங்களை பட்டியலிட்டார். வடபழஞ்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில்வே கேட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதலமைச்சர் உறுதியளித்தார்.

நாகமலை புதுக்கோட்டையில் பிரசாரம் மேற்கொண்ட துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், குடிசை பகுதிகளில் வாழும் மக்கள் வாழ்வதற்காக இதுவரை 6 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். 2023ம் ஆண்டுக்குள் குடிசைப்பகுதிகளில் வாழும் அனைத்து மக்களுக்கும் தரமான, உறுதியான கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும் என உறுதியளித்தார்.

Exit mobile version