நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவு

இந்த ஆண்டில் நடைபெற உள்ள நீட் தேர்வு விண்ணப்பங்களை அனுப்புவதற்கான காலக்கெடு முடிவுபெற்றது.

மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு கடந்த டிசம்பர் 2-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன. கடந்த 31-ம் தேதி விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை நாட்கள் வருவதால், நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கு கூடுதல் அவகாசம் கொடுக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு ஜனவரி  6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இரவு 11.50 மணியோடு நிறைவடைந்தது. இதனையடுத்து,விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட ஹால் டிக்கெட்டுக்கள் மார்ச் 27-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட்டு, மே மாதம் 3-ம் நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்வு முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version