டிஜிட்டல் போர்டுகளின் செலவை ஸ்டாலின் கணக்கில் சேர்க்க வலியுறுத்தி புகார்!

கொளத்தூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் விஜயகுமார், தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் பார்வையாளர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் புகார் மனு அளித்துள்ளார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் அதிகாரியின் அனுமதியின்றி ஸ்டாலின் குறித்து 2 ஆயிரம் டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், 2 லட்சத்திற்கும் அதிகமான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளதாகவும் கூறினார். ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்த நாள் முதல், டிஜிட்டல் போர்டுகள் மற்றும் ஸ்டிக்கர்களை அகற்றும் நாள் வரை, அதற்கான செலவு கணக்கை திமுக வேட்பாளர் ஸ்டாலின் கணக்கில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version