வீட்டுக்கே வந்து தடுப்பூசி போடும் கோவை மாநகராட்சி

கோவையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக வீடு தேடி சென்று கொரோனா தடுப்பூசி போடும், வாகன சேவையை மாநகராட்சி அறிமுகப்படுத்தி உள்ளது.

கொரோனா பரவலை கட்டுபடுத்த, அனைத்து தரப்பினரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தி உள்ளது. இதற்காக ஆங்காங்கே மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒருகட்டமாக, கோவையில் வீடு தேடி சென்று கொரோனா தடுப்பூசி போடும் வாகன சேவையை மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் துவங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர் கோவையில் தினமும் 10 ஆயிரம் தடுப்பூசிகள் போட இலக்கு நிர்ணயித்துள்ளதாக கூறினார். 45 வயதுக்கு மேற்பட்டடோர் கட்டாயம் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

Exit mobile version