தென்னை விவசாயிகளுக்கு அரசுக்கு கோரிக்கை

கொப்பரை தேங்காய்க்கு உரிய விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர், அய்யம்பாளையம், சித்தையன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில் விளையும் தேங்காய்களை எண்ணெய் எடுப்பதற்காக விவசாயிகள் விளைவிக்கின்றனர். முன்பு டன் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை விலை கிடைத்த இடத்தில், தற்பொழுது 20 ஆயிரத்திலிருந்து 21 ஆயிரத்திற்கே வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். எனவே மத்திய தென்னை வாரியம் நேரடி கொள் முதல் நிலையம் அமைத்து கொப்பரைக்கு உரிய விலை கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என்று ஆத்தூர் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version