சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாச்சலத்தின் இல்லத் திருமண விழாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று நடத்தி வைத்தார்.
சேலம் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும், மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வெங்கடாசலத்தின் மகன் ஜனார்த்தனன் மற்றும் தொழிலதிபர் சண்முகத்தின் மகள் சவுந்தர்யா ஆகியோரின் திருமண நிகழ்ச்சி சேலத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்தார். முன்னதாக நேற்றிரவு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கலந்து கொண்டார். திருமண விழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.