முதல்வரின் உத்தரவுப் படி ஆழியார் அணையில் இருந்து நீர் திறப்பு

முதலமைச்சரின் உத்தரவுப் படி ஆழியார் அணையில் இருந்து பாசன வசதிக்காக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் துணை சபாநாயகர் ஜெயராமன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

பரம்பிக்குளம்,ஆழியார் திட்ட தொகுப்பில் உள்ள ஆழியார் அணையிலிருந்து பொள்ளாச்சி, ஆனைமலை, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 22 ஆயிரத்து 332 ஏக்கருக்கு பாசன வசதிக்காக நீர் திறந்து விட வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். அதன் படி ஆழியார் அணையில் இருந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் துணை சபாநாயகர் ஜெயராமன் ஆகியோர் பாசன வசதிக்காக தண்ணீரை திறந்து வைத்தனர். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,135 நாட்களுக்கு உரிய இடைவெளியில் 70 நாட்களுக்கு 2 ஆயிரத்து 250 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடப்படும் எனத் தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தல் மட்டுமின்றி 2021ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும் எனவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். நிகழ்ச்சியில் ஆட்சியர் உட்பட அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

Exit mobile version