நதிநீர் இணைப்பு குறித்து உறுதியளித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
கோதாவரி- கிருஷ்ணா நதிநீர் இணைப்பு திட்டம் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தார். நிதின் கட்கரியின் இந்த அறிவிப்பிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மிக முக்கியமான அறிவிப்பு என்றும், இதனால் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தீர்க்கப்படும் எனவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.