பவானிசாகர் அணையில் இருந்து இரண்டாம் போக பாசனத்திற்காக 120 நாட்கள் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து இரண்டாம் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்க, கொடிவேரி விவசாயிகள் கோரிக்கைகள் விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, பவானிசாகர் அணையில் இருந்து அரசன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால் பகுதிகளில் உள்ள 24 ஆயிரத்து 504 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில், பிப்ரவரி 1 முதல் மே 31ஆம் தேதி வரை, 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளார்.
விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, அதிக மகசூல் பெற கேட்டுக்கொள்வதாகவும் முதலமைச்சர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.