முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், தஞ்சை மாவட்டம் தோகூர் கிராமத்தில் உள்ள காவேரி ஆற்றின் மண் திட்டுக்களை சமப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
முதலமைச்சரின் உத்தரவின் பேரில், இங்குள்ள காவேரி ஆற்றின் மண் திட்டுக்களை பொக்லைன் இயந்திரம் மூலம் 800 மீட்டர் தூரம் வரை 63 லட்சம் ரூபாய் மதிப்பில் சமப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல், பாதரக்குடி கிராமம் அருகேயுள்ள வெண்ணாற்றில் தண்ணீர் செல்ல தடையாக இருக்கும் புதர்ச்செடிகள் மற்றும் மண் திட்டுக்களை பொக்லைன் எந்திரம் மூலம் சமப்படுத்தும் பணிகள் 29 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அடுத்த மாதம் இறுதிக்குள் விரைந்து முடிக்கப்படும் என பொதுப்பணித்துறை உதவி ஆய்வாளர் பிரபாகரன் கூறினார்.