குடிமராமத்து திட்டம் மக்கள் இயக்கமாக உருவெடுத்து, பருவ மழையை சேமிக்கும் திட்டமாக மாறியுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பொதுப்பணித்துறை சார்பாக செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவ்வப்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், சென்னை நமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுப்பணித்துறை செயலாளர், பொறியாளர்கள், அதிகாரிகள் பங்கேற்னர்.
அப்போது பொதுப்பணித்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குடிமராமத்து திட்டம் மக்கள் இயக்கமாக உருவெடுத்து, பருவமழையை சேமிக்கும் திட்டமாக மாறியுள்ளதாக கூறினார். அத்திக்கடவு – அவிநாசி திட்டம் அரசின் கானவுத் திட்டம் எண்றும், தற்போது செயல்வடிவம் பெற்றுள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.