சீனாவின் உப்பு நீர் ஏரி, சிவப்பு நிறத்தில் மாறியது

சீனாவின் வடக்கு பகுதியில் ஷான்க்ஸி (Shanxi) மாகாணத்தில் உள்ள யுன்செங்கில் சுமார் 132 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட உப்பு நீர் ஏரி அமைந்துள்ளது. இதில் உள்ள உப்புகள் அனைத்தும் தற்போது சிவப்பு நிறமாக மாறி வருகிறது. இந்த நிற மாற்றத்திற்கு வெப்பமயமாதலே காரணம் என கூறப்படுகிறது. வெப்பத்தால் உப்பின் அடர்த்தி அதிகரிப்பதால் அவை  நிறம் மாறி பிரதிபலிப்பதாக சொல்லப்படுகிறது. உப்பள ஏரி நீர் நிறம் மாறி காட்சி தருவது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது

Exit mobile version