நிலவின் மறுபக்கத்தை தொட்டது Change 4 விண்கலம்: சீனா சாதனை

 

 

நிலவின் மறுபக்கத்தில் விண்கலத்தை வெற்றிகரமாக நிலைநிறுத்தி சீனா வரலாற்று சாதனை படைத்துள்ளது.

சீனாவின் தேசிய விண்வெளி ஆய்வு நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் 8-ம் தேதி பெய்ஜிங் நேரப்படி ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து மார்ச் 3பி ரக ரக்கெட்டை விண்ணில் செலுத்தியது. விண்ணில் செலுத்தப்பட்ட அந்த ராக்கெட்டில் லூனார் லாண்டர் மற்றும் ரோவர் விண்கலமான Change 4 இணைக்கப்பட்டது. இந்த Change 4 விண்கலம், நிலாவின் பின்புறத்தை ஆய்வு செய்து படம்பிடித்து அனுப்பும் என்று சீன விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

கடந்த டிசம்பர் 12-ம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்த இந்த விண்கலம், டிசம்பர் 31-ம் தேதி தனக்குரிய சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இன்று காலை Change 4 விண்கலம் நிலவின் பின்புறம் உள்ள இருண்ட பகுதியில் முதன்முறையாக தரையிறங்கியுள்ளதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். நிலவின் மறுபக்கத்தில் நிலைநிறுத்தப்பட்ட முதல் விண்கலம் Change 4, வரலாற்று சாதனைப் படைத்துள்ளது.

Exit mobile version