குழந்தை விற்பனை வழக்கு:இதுவரை 5 பெண்கள் உள்பட 8 பேர் கைது

நாமக்கல் குழந்தை விற்பனை விவகாரத்தில் இதுவரை 5 பெண்கள் உள்பட 8 பேர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த அமுதா எனும் ஓய்வுபெற்ற செவிலியர் குழந்தைகளை வாங்கி விற்பதாக வெளியான தகவலை அடுத்து அமுதாவும் அவரது கணவர் ரவிச்சந்திரனும் கைது செய்யப்பட்டனர். அமுதா 3 குழந்தைகளை வாங்கி விற்றதாவும் அவருக்கு கொல்லிமலை பகுதியை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் முருகேசன் உதவியதாகவும் கூறியிருந்தார்.இதையடுத்து முருகேசன் கைதானார்.

முருகேசன், கொல்லிமலை வாழவந்திநாடு பகுதியில் உள்ள ஒரு பெண் குழந்தையை கடந்த 17ந்தேதி வாங்கி விற்பனை செய்ததாகவும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனிடையே ஈரோடு பகுதியைச் சேர்ந்த பர்வீன் ,நிஷா,அருள்சாமி ஆகியோரிடம் விசாரணை நடைபெற்ற போது 4குழந்தைகளை வாங்கி விற்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் இடைத்தரகர்களாக செயல்பட்ட ஈரோடு பவானி பகுதியை லீலா, செல்வி ஆகிய 2 பேரை கைது செய்து போலீசார் அவர்களை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Exit mobile version