கஜா புயல் பாதிப்பு மற்றும் நிவாரணம் குறித்து முதலமைச்சர் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தஞ்சை டெல்டா வழியாக கரையை கடந்த கஜா புயல், அந்த பகுதியை புரட்டிப் போட்டுள்ளது. புயல் பாதிப்பு குறித்து தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சி.வி. சண்முகம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி டி.கே. ராஜேந்திரன், வருவாய் துறை ஆணையர் சத்தியகோபால், செயலர் அதுல்ய மிஸ்ரா ஆகியோர் பங்கேற்றுள்ளனர். புயல் பாதிப்பு சேதம், மீட்பு நடவடிக்கைகள், நிவாரணம் ஆகியவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. நிவாரணத்திற்கு தேவைப்படும் நிதி, மத்திய அரசிடம் நிதி கேட்பது குறித்தும் உள்ளிட்ட இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.