தமிழகம் முழுவதும் மறுசுழற்சி குப்பைத் தொட்டியின் பயன்பாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
பிளாஸ்டிக் ஒழிப்பின் தொடர் நடவடிக்கையாக தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியமும், தனியார் அமைப்பும் இணைந்து புதிதாக நவீன மறுசுழற்சி குப்பை தொட்டியினை தமிழகம் முழுவதும் அமைக்க உள்ளன. இதன் செயல்பாட்டினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தனியார் அமைப்பினர் ஹெப்சிபா, முதற் கட்டமாக 500 மறுசுழற்சி குப்பை தொட்டிகள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஒருமுறை பயன்படுத்திய பிளாஸ்டிக் கழிவுகளை இதில் போடும் போது, பரிசு கூப்பன் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.