சென்னை, கோவை, விழுப்புரம் உள்ளிட்ட 8 மண்டலங்களுக்கு 140 கோடி ரூபாயில் 555 புதிய பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார்.
போக்குவரத்துத்துறை சார்பில் சென்னை, கோவை, விழுப்புரம், சேலம், கும்பகோணம் உள்ளிட்ட 8 மண்டலங்களுக்கு 555 புதிய பேருந்துகள் வழங்கப்படுகின்றன.140 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும் இந்த பேருந்துகளை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைத்தார். சென்னைக்கு 56 பேருந்துகளும், மற்ற மண்டலங்களுக்கு 499 பேருந்துகளும் வழங்கப்பட்டன.பேருந்து சேவையை துவக்கி வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பேருந்துகளின் உள்ளே சென்றும் ஆய்வு மேற்கொண்டார். உடன் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்துத்துறை செயலர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.