தமிழகத்தில் அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட முதலமைச்சர் உத்தரவு!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாளை மாலை 6 மணி முதல் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய அவர், வரும் 31 ஆம் தேதி 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் கூறினார்.

நாளை மாலை 6 மணி முதல் வரும் 31ஆம் தேதி வரை அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும், நாளை மாலை 6 மணி முதல் வரும் 31 ஆம் தேதி 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் , பால், காய்கறி, இறைச்சி கடைகள் உள்ளிட்ட அத்தியவாசிய கடைகளை தவிர மற்ற கடைகள் இயங்காது , அரசு தனியார் பேருந்துகள், ஆட்டோ, டாக்சிகள் இயங்காது அம்மா உணவகங்கள் வழக்கம் போல் இயங்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டதற்கான விவரம் ஒட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகளில் தூய்மை பராமரிப்பு கடைபிடிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழக அரசு கூடுதலாக 500 கோடி ரூபாய் ஒதுக்குவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், கொரோனா வைரஸை தடுக்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டார்.

Exit mobile version