சென்னை தலைமை செயலகத்தில் இருந்து பல்வேறு நிகழ்வுகளின் காணொலி காட்சிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்தார்.
பொதுப்பணித்துறை, வனத்துறை, கூட்டுறவுத் துறை, சமூக நலத்துறை, தொழிற்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் திட்டங்கள் மற்றும் கட்டிடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார்.
விழுப்புரத்தில் தளவனூர் கிராமத்திற்கும் கடலூர் திரிமங்கலம் கிராமங்களுக்கிடையில் பெண்ணையாற்றின் குறுக்கே 25 கோடி ரூபாய் மதிப்பில் அணைக்கட்டிற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
வனத்துறையில் சிறந்து விளங்கிய அதிகாரிகள் 26 பேருக்கு முதலமைச்சர் விருது வழங்கி அவர் கவுரவித்தார்.
பெண்களின் பாதுகாப்பிற்காக 181 என்ற இலவச தொலைபேசி சேவையையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். மத்திய அரசின் இந்த சேவைமூலம் வரதட்சணை புகார், பாலியல் தொல்லைகள் ஆகியவை குறித்து பெண்கள் உடனடியாக புகார் அளிக்க முடியும்.
இந்த எண்ணுடன் தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் விவரங்கள், தொலைபேசி எண்கள் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.
Discussion about this post