சுதந்திர தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டு மக்கள் அனைவரும் சாதி, மத பேதமின்றி இந்தியர் என்ற ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். சுதந்திர தின நன்னாளில் நாட்டின் விடுதலைக்காக போராடிய, தியாகிகளை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டை வல்லரசு நாடாக மாற்ற வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது என குறிப்பிடுள்ள அவர், தமிழகத்தை வளம் மிக்க மாநிலமாக மாற்ற அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.