முதலமைச்சர் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது

தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. ஜனவரி 8ம் தேதிவரை கூட்டத் தொடர் நடைபெறும் என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். இந்நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் பற்றி ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version