ஸ்டாலின் வழங்கிய பட்டாவை தூக்கி எறிந்த நரிக்குறவ மக்களை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து பஞ்சாயத்து பேசினார்.
மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி பகுதியில் உள்ள நரிக்குறவர் பகுதியில் 20 இருளர் குடும்பமும், 50 க்கும் மேற்பட்ட நரிக்குறவர்களும் வசித்து வருகின்றனர்.
கடந்த 2 மாதத்திற்கு முன்னர் அங்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அம்மக்களுக்கு வீட்டு மனை பட்டா உள்ளிட்ட ஆவணங்களை நேரில் வழங்கினார். இருளர் மக்களுக்கும், நரிக்குறவர் மக்களுக்கும் அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நரிக்குறவர் மக்கள் தங்களுக்கு ஸ்டாலின் வழங்கிய பட்டா தேவை இல்லை என தெரிவித்துள்ளனர். முதலமைச்சரிடம் பெற்ற பட்டாக்களை வருவாய் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப் போவதாக கிடைத்த தகவலையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அப்பகுதிக்கு விரைந்தார்.
நரிக்குறவர் மக்களிடம் பஞ்சாயத்து பேசிய மாவட்ட ஆட்சியர் பட்டா-வை திருப்பி தர வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
Discussion about this post