கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக மத்திய குழு இன்று தமிழகம் வருகிறது.
உள்துறை அமைச்சகத்தின் நிதித்துறை இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்ட்டு தலைமையிலான 5 பேர் அடங்கிய குழு டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை 5.30 மணியளவில் சென்னை வருகிறது. இந்த குழு சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்கள் புயலால் பாதித்த நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்கிறது.
சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மத்திய ஆய்வுக்குழு சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இரு குழுக்களாக பிரிந்து, புயல் பாதித்த இடங்களில் ஆய்வு நடத்த உள்ளதாக தெரிகிறது.