தெலங்கானாவில் மதத்தின் பெயரால் தேர்தல் பிரச்சாரம் செய்யப்படுவது நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தெலங்கானாவில் அடுத்த மாதம் 7-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து அங்கு ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், மாநிலத்தில் தேர்தல் தயார்நிலை குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் ஆய்வு செய்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தெலங்கானாவில் தேர்தல் நடத்தை விதிகளை அரசியல் கட்சிகள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். தேர்தலில் அளவுக்கதிகமான பணம் புழங்கும் புகாரில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.