தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி பிரச்சாரத்தை துவக்கினார்

அதிமுக கூட்டணி கட்சியின், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி, தேர்தல் பிரசாரத்தை துவக்கினார்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், சாமி தரிசனத்துக்குப் பிறகு தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி பிரசாரத்தை துவக்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களின் கஷ்டம் என்னவென்பது தனக்கு புரியும் என்றும், பிரதமர் மோடி – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்தை செயல்படுத்துவோம் என்றும் அவர் கூறினார்.

Exit mobile version